போதையில் தகராறு: மகனை கொன்று நாடகமாடிய தந்தை கைது

பொள்ளாச்சி அருகே, போதையில் மகனை அடித்துக் கொன்று நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-09-13 04:30 GMT

கொலை நடந்த வீடு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி ராமர்கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (50). கட்டிட தொழிலாளி. இவரது மூத்த மகன் செந்தில்குமார் (24) மற்றும் 16 வயதில் இளைய மகன் உள்ளனர். தந்தை கதிர்வேல், மதுபோதையில் இரண்டு மகன்களுக்கும் இடையே,  வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், தந்தை கதிர்வேல் மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து, கம்பியால் தாக்கியதில் செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தந்தை மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து, மயங்கிய செந்தில்குமாரை தூக்கி அருகில் உள்ள பாலத்தின் அருகே கொண்டு சென்று வீசிவிட்டு வாகன விபத்தில் செந்தில்குமார் காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செந்தில்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில், செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

மருத்துவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து, போலீசார் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். இதில், இருவரும் கொலை செய்து நாடகமாடியது உறுதியானது. இதையடுத்து, தந்தை மற்றும் இளையமகன் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கதிர்வேலை கோவை மத்திய சிறையிலும், இளையமகனை உடுமலை கிளைச் சிறையிலும் அடைத்தனர்.

Tags:    

Similar News