கோவை அருகே யானை தாக்கி ஆதிவாசி பலி

கோவை வனப்பகுதி அருகே, காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆதிவாசி உயிரிழந்தார்.

Update: 2021-06-02 15:34 GMT

கோவை  குண்டூர் வனப்பகுதியில், யானை தாக்கியதில் உயிரிழந்த ஆதிவாதி.

கோவை மாவட்டம் வெள்ளிங்காடு பகுதியை சேர்ந்தவர் காரமடையன், வயது 65. பழங்குடியின கிராமத்தை சேர்ந்த இவர், மாடு மேய்த்து வந்தார்.

வழக்கம் போல் இன்று,  குண்டூர் வனப்பகுதி அருகே, காரமடையன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை ஒன்று, அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய காரமடை வனத்துறையினர், உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையை,  வனத்துறையினர் வழங்க உள்ளனர். இச்சம்பவம், கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News