பாடப்பிரிவு நீக்கப்பட்டதை கண்டித்து வனக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
2011ஆம் ஆண்டு பட்டு புழுவியல்துறை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை எட்டு பேஜ் மாணவர்கள் கல்வி பயின்று சென்றுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேளாண் பல்கலை கழகத்தின் கீழ் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் வனவியல், பட்டுப்புழு, மரபியல் உள்ளிட்ட படிப்புகள் இருந்து வரும் நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு பட்டு புழுவியல்துறை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை எட்டு பேஜ் மாணவர்கள் கல்வி பயின்று சென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்தாண்டு வேளாண் பல்கலை கழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கான பாட பிரிவுகளில் பட்டு புழுவியில் துறையை நீக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் பட்டுப்புழுவியல் படித்து வரும் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும் போது இந்த துறைக்கு 30 மாணவர்களுக்கு அட்மின் நடைபெறும். ஆனால் இந்தாண்டு மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. இதனை கண்டித்து ஏற்கனவே பட்டுப்புழுவியல் துறை படித்து வரும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இப்பாடப்பிரிவு ரத்து செய்ததற்கான காரணத்தை கூறாமல் இரண்டான்டிற்கு இந்த படிப்பை ஒத்திவைத்துள்ளதாகவும், பட்டுப்புழுவியல் துறைக்கான அனைத்து வசதிகளும் இக்கல்லூரியில் உள்ளதால் இப்படிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.