கோவை அன்னூரில் தடை செய்யப்பட்ட 338 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ. 2 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 338 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-08-27 10:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அன்னூர் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அன்னூர் நிலைய காவ‌ல் துறை‌யின‌ர் சம்பவம் இடமான தர்மராஜா கோவில் தெரு அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக நான்கு சக்கர வாகனத்தில் வைத்திருந்த கோவை மீனம்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (35) மற்றும் துடியலூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து  2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 338 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News