கோடையில் குளிர்வித்த மழை; மக்கள் மகிழ்ச்சி

Coimbatore News, Coimbatore News Today- கோவை, கிணத்துக்கடவு பகுதியில் குளிர்வித்த கோடை மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update: 2023-03-31 06:29 GMT

Coimbatore News, Coimbatore News Today- கிணத்துக்கடவு பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி (கோப்பு படம்)

Coimbatore News, Coimbatore News Today- கோவை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்தது. வீடுகளில் உஷ்ணம் தகித்த நிலையில் மக்கள் தவித்தனர். இரவு நேரங்களில் கடுமையான வெப்பத்தாக்கத்தால், புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வீட்டில் பொதுமக்கள் தூங்குவதற்கு கடும் சிரமப்பட்டனர். வெயில் காரணமாக முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், வெளியிடங்களுக்கு செல்வதையே தவிர்க்கும் நிலை உருவானது. மேலும்  கொளுத்தும் வெயிலில், ரோடுகளில் சென்றுவரவே மக்கள் அவதிப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் வானில் மேகமூட்டம் திரண்டு வந்து, திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அப்போது பலத்த காற்றுடன் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கியது. மழை விடாமல், ஒரு மணி நேரமாக இடியுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

மழையின் காரணமாக கோவை- பொள்ளாச்சி நான்கு வழி சாலை சர்வீஸ் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நீண்ட நாளுக்கு பிறகு கிணத்துக்கடவு பகுதியில் பலத்த மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் நேற்று மாலை 6.30 மணியளவில் வடசித்தூர், காட்டம்பட்டி, கப்பளாங்கரை, நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கோடை மழை பெய்தது. அதனால் வெப்பம் தணிந்து, இதமான காலநிலை நிலவியது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளது; இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்பதால், அவ்வப்போது இதுபோன்று மழை பெய்தால், வெப்பத்தின் தாக்கதில் இருந்து பொதுமக்கள் ஓரளவு சமாளித்துக்கொள்ள முடியும். அதே வேளையில், கோடை கால பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, வெயில் கடுமையாக இருக்கக்கூடிய  பகல் வேளைகளில், வெளியிடங்களுக்கு செல்வதை, பொதுமக்கள் கூடுமான வரை தவிர்க்க வேண்டும். இயன்றவரை மோர், இளநீர், பழச்சாறு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News