வீடுகளை திறந்து வைத்து தூங்குபவர்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் கைது
கையில் கிடைக்கும் செல்போன், பணம், நகை போன்றவற்றை நூதனமாக திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கோவையில் கடந்த சில மாதங்களாகவே மதிய நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் நடைபெறும் திருட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த கொள்ளையர்கள் கையில் கிடைக்கும் செல்போன், பணம், நகை போன்றவற்றை நூதனமாக திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக கோவை மாநகரில் அதிகரித்து வந்த இக்கொள்ளை சம்பவத்தை தடுக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்தனர். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, சௌரியம்மாள் மற்றும் இவர்களது சகோதரர்களான ரமேஷ், ஆனந்த் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சகோதரிகள் திருடுவதும், அதை சகோதரர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.