அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மோசடி - கார் டிரைவர் கைது

Coimbatore News- அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-27 11:00 GMT

Coimbatore News- அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

Coimbatore News, Coimbatore News Today- கோவை பெரியநாயக்கன்பாளையம் டேங்க் ரோடு பகுதியில் வசிப்பவர் சக்திவேல். கடந்த 7ம் தேதி சக்திவேலுக்கு அறிமுகமான ஜேசுராஜா என்பவர் மதுரையில் சிறப்பு தாசில்தாராக உள்ளதாகவும், அரசு துறையில் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதன்பேரில் சக்திவேலின் மனைவிக்கு கோவை மாநகராட்சியில் பில் கலெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் ரூ.25 ஆயிரத்தை ஜேசுராஜா வாங்கியுள்ளார். பின்னர் மீதி பணம் ரூ.2 லட்சத்தை பெற சக்திவேல் வீட்டிற்கு ஜேசுராஜா வந்துள்ளார். ஜேசுராஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சக்திவேல், அடையாள அட்டையை கேட்டுள்ளார். உடனே சுதரித்துக்கொண்ட ஜேசுராஜா சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியுள்ளார்.

இதுகுறித்து சக்திவேல் பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சாந்திமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காரில் வந்த ஜேசுராஜாவை காவல் துறையினர் பிடித்தனர். பின்னர் ஜேசுராஜாவை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது, அவர் விருதுநகர் மாவட்டம், நல்லமங்களம், மணியன் கோவில் வீதியை சேர்ந்த ஜேசுராஜா என்பதும், தற்போது சாந்திமேடு, லட்சுமிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், மதுரையில் தாசில்தாராக வேலை செய்வதாக பொய்யான தகவலை கூறி சக்திவேலுவிடம் ரூபாய் 25 ஆயிரத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது.

மேலும் இதே போல் 2023 ஆம் ஆண்டு ஜேசுராஜா வீட்டு அருகில் உள்ள சேகர் என்வரின் மகன் 31 வயதான முகிலன் என்பவரிடம் தாசில்தார் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 10 லட்சம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் கலெக்டர் அலுவலகத்தில் ஒ.ஏ வேலை வாங்கி தருவதாககூறி ரூபாய் 6 லட்சமும் மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 25 ஆயிரம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. அதனையடுத்து ஜேசுராஜா மீது வழக்குபதிவு செய்த போலீசார் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News