கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம்

திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு, தொழிலில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தினர்;

Update: 2023-08-05 13:15 GMT

நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துச்சாமி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டும் மையம் கோயம்புத்தூர் நடத்தும் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் இன்று  கோவை கவுண்டம்பாளையம் துடியலூர் ஜிஎன் மில்ஸ் அருகே உள்ள கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், முதலாவது வேலை வாய்ப்பு முகாம்  கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது. முகாமை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துச்சாமி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி நியமனம் ஆணையை வழங்கினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, திமுகவின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், தொ. அ. ரவி, தளபதி முருகேஷ், கோவை மாநகராட்சி மேயர், ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News