கோவை: காலி ஊசிகளை மத்திய அரசுக்கு அனுப்பி தபெதிக போராட்டம்
தடுப்பூசி ஒதுக்கக்கோரி, மத்திய அரசுக்கு காலி தடுப்பூசிகளை அனுப்பி, கோவையில் தபெதிகவினர் போராட்டம் நடத்தினர்.;
கோவையில், தடுப்பூசி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினர்.
தமிழகத்திற்கு, மத்திய அரசு தடுப்பூசிகளை போதிய அளவிற்கு ஒதுக்குவதில்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், காலி சிரஞ்சுகளை மத்திய அரசுக்கு அனுப்பி, தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கி தரும்படி வலியுறுத்தினர்.
இதுகுறித்து, த.பெ.தி.க. பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் கூறுகையில், தடுப்பூசிகளை தமிழகத்திற்கு மோடி அரசு போதுமான அளவிற்கு வழங்காமல் வஞ்சகம் செய்கிறது. தமிழகத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி ஆலையை திறப்பதற்கும் அனுமதி மறுத்து வருகிறது. இனிமேலாவது மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல் போதுமான அளவிற்கு தடுப்பூசிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்றார்.