தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம்: தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்

அரசியல் ரீதியாக தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Update: 2021-09-22 07:45 GMT

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையக் குழு தலைவர் வெங்கடேசன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேஷன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து மத்திய மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பின்னர் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள், பாதுகாப்பு உபகரணங்களை தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேஷ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் சார்பாக இரண்டு நாள் சுற்றுபயணம் தமிழகம் வந்து உள்ளேன். நேற்று நீலகிரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றதாகவும், இன்று கோவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தவர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் குறைகளை கேட்டறிந்ததாக கூறினார். பத்து வருடங்களுக்கு மேலாக மாநகராட்சியில் பணியாற்றிய நிலையில் வைப்புநிதி பிடிக்கபட்டதாகவும், அதன் நிலை என்ன என்பது தங்களுக்கு தெரியவில்லை என புகார் தெரிவித்ததாகவும், இது குறித்து கேட்டபோது மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டதாகவும், தமிழகத்தில் இவ்வாறு பாராட்டு சான்றிதழ் கொடுப்பது இதுவே முதல் முறை என நினைப்பதாக கூறினார். இதன் பின்னர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கபட்டதாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறுனார்.

தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கபட்டதை விட குறைவான ஊதியம் வழங்கபடுவதாகவும், அதிகப்படியான வேலை பளு என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் எதிர் கொள்வதாகவும், ஒப்பந்த முறை காரணமாக இது நடைபெறுவதால் ஒப்பந்த பணியாளர் முறையை ஒழித்து நிரந்தர பணியாளர் நடைமுறையை தமிழக அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து ஒப்பந்த பணியாளர்கள் நிலையை ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசு ஒரு குழு அமைக்கபட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டபடும் என்றார்.

கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கபட்டவர்கள் இப்போது நீக்கபட்டு உள்ளனர் எனவும், இதனால் நதியா என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறினார். இதேபோல் அரசியல் ரீதியாக தமிழகம் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என புகார்கள் கிடைக்கபெறுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News