மகளுடன் சென்று கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இதயதுல்லா வீட்டுக்கு தனது மகள் அக்க்ஷரா உடன் சென்று ஆதரவு திரட்டினார்.;

Update: 2021-03-21 09:21 GMT

சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவையில் முகாமிட்டுள்ள அவர், கோவையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டவுன்ஹால் கோட்டைமேடு பகுதிக்கு வந்த கமலஹாசன், அங்கு மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பணிமனை திறந்து வைத்தார். பின்னர் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இதயதுல்லா வீட்டுக்கு தனது மகள் அக்க்ஷரா உடன் சென்ற அவர், இஸ்லாமியர்கள் தங்களுக்கு சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கோட்டைமேடு பகுதியில் வீதி வீதியாக நடந்து, காரில் சென்றும் வாக்கு சேகரித்த கமல்ஹாசன், கோட்டைமேடு பகுதியில் உள்ள வாலாங்குளத்தையும் பார்வையிட்டார்.

Tags:    

Similar News