கமல்ஹாசன் பொது விவாதத்திற்கு தயாரா? - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கேள்வி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கமல்ஹாசன் பொது விவாதத்திற்கு தயாரா என கேள்வி எழுப்பினார்.;

Update: 2021-03-27 12:15 GMT

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடந்த மகளிர் பேரணியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கோவைக்கு வந்தார், குஜராத் சமாஜ் கட்டிடத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

வடமாநில மக்களுடன் தாண்டியா நடனமாடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, பின்னர் வடமாநில மக்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்களை குஜராத்தி மற்றும் ஹிந்தி மொழியில் விளக்கினார்.

தமிழகத்திற்கு 11 மருத்துவகல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகளை இந்த மத்திய அரசு வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.மேலும் வானதி சீனிவாசனுடன், நடிகர் கமலஹாசன் பொது விவாதத்திற்கு தயாரா என கேள்வி எழுப்பிய ஸ்மிருதி ராணி,

யார் சொல்லும் பிரச்சினைகள், தீர்வுகள், வளர்ச்சி திட்டங்கள் சிறந்தது என பொது விவாதத்தில் யாருடைய கருத்துகள் சரியானது என விவாதிக்கலாம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் கமலஹாசனை மட்டும் விமர்சிப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காங்கிரஸ் எங்களுடன் போட்டியில் இல்லை எனவும், கமல்ஹாசன் மட்டும் போட்டியில் இருப்பதால் விமர்சிக்கிறோம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி தெரிவித்தார்.

Tags:    

Similar News