கோவை மாநகராட்சி பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு

கோவை மாநகராட்சி பகுதியில், நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 1962 ஆக இருந்த நிலையில், நேற்று 1869 ஆக குறைந்துள்ளது.

Update: 2021-05-28 12:18 GMT

கொரோனா தொற்று தடுப்புப்பணியில், சுகாதாரப் பணியாளர்கள்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களாக தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் தினசரி தொற்று பாதிப்பில், தமிழக அளவில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4734 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று முன்தினம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 1962 ஆக இருந்தது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதலாக 1500 பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையின்றி நடமாடுவதை கட்டுபடுத்த மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொற்று பாதித்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. இதன் மூலம் நேற்று முன்தினம் மாநகர பகுதிகளில் 1962 ஆக இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை,  நேற்று 1869 ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கிழக்கு மண்டத்தில் 392 பேருக்கும் மேற்கு மண்டலத்தில் 410 பேருக்கும் வடக்கு மண்டலத்தில் 354 பேருக்கும் தெற்கு மண்டலத்தில் 458 பேருக்கும் மத்திய மண்டலத்தில் 255 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மாவட்டத்தின் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சுமார் 57 சதவீத பாதிப்பு மாநகரில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது, நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

Tags:    

Similar News