லஞ்சம் வாங்கிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்
கோவையில், லஞ்சம் வாங்கிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.;
கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் பாப்பாத்தி. இவர், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில், இவர் பொதுமக்களிடம் பணம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, உடனடியாக போக்குவரத்து பெண் காவலர் பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு மாற்றிய காவல் துறை அதிகாரிகள், துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டனர். ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட பாப்பாத்தியிடம், பணம் வாங்கியது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகின்றது.