கோவை ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சா; இருவர் கைது
கோவை ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சாவுடன் வந்த இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.;
கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் இரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை வந்த இருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பார்சலில் 38 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தேனியை சேர்ந்த கதிரேசன், செல்லத்துரை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட இருவரையும் கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ரயில்வே போலீசார் ஓப்படைத்தனர்.