தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
சுமார் 16 கிலோ கிராம் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்து இருப்பது தெரிய வந்தது.;
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியம்மாள் என்பவர் ராக்கியபாளையம் பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு தர்மராஜ் என்பவர் வீட்டில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தர்மராஜ் வீட்டில் சோதனை செய்த போது, சுமார் 16 கிலோ கிராம் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.