இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை - நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள 1423 ரேசன்கடைகளில் இன்று இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது .
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 14 வகையான பொருட்கள் வழங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 1423 ரேசன்கடைகளில் இன்று இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகின்றது.
மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. காலை முதலே பொது மக்கள் நீண்ட வரிசையில் கையில் டோக்கனுடன் காத்திருந்த மக்கள் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை வாங்கிச் சென்றனர். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவில் வீதியில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.