கோவையில் தகரம் அடைத்து தடுப்பு... தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடுப்பு

கோவையில் கொரோனா பாதித்த தெருவை தகரச்சீட்டினால் அடைக்க எதிர்ப்பு - தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினர் திடீர் போராட்டம்

Update: 2021-05-04 12:16 GMT

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க,  சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் வீதியிலுள்ள ஒருவரின் வீட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் தகரச் சீட்டு அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவித்திருந்தனர்.

ஆனால், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு அந்த வீதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு தகரம் அடைப்பதை கண்டித்து, 15 க்கும் மேற்பட்ட வீட்டினர், திடீர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "ஒரு வீட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு,  அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டதால், வெளியே அல்லது வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். கொரோனா பாதித்த வீட்டினை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். ஒரு தெருவினை தனிமைப்படுத்துவது சரியானது அல்ல" என்றனர்.

Tags:    

Similar News