கோவையில் நூதன முறையில் கேமரா திருட்டு - போலீசார் விசாரணை

கோவையில், கேமராவை பரிசோதிப்பது போல், கடையில் திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-07-04 12:45 GMT

சிசிடிவியில் பதிவான,  கேமரா திருடிய நபர்

கோவை கிராஸ்கட் ரோடு வடகோவை மேம்பாலம் அருகே,  பிரேம்சந்தர் என்பவருக்கு சொந்தமாக புகைப்பட கருவிகள் விற்பனை நிலையம் மற்றும் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த கடையில்,  கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 1ஆம் தேதி அங்கு கேமிரா வாங்குவதற்காக வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர்,  பேனாசோனிக் கேமராவை கேட்டுள்ளார். பின்னர் அதை வாங்கிக் கொண்டு, போட்டோ எடுத்து பரிசோதிப்பதாகக்கூறி, கடையை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது,  அவரை பாலசுப்பிரமணியம் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

எனினும், அந்த நபர் அங்கிருந்து வேகமாக கேமராவுடன் ஓடிச் சென்று, கீழே இரு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி தயாராக இருந்த அவருடைய நண்பருடன், கேமராவை திருடிக்கொண்டு சென்று விட்டார். இது தொடர்பாக, கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன்  புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து, திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News