தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டம் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைப்பு

தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வானதி சீனிவாசன் கூறினார்.;

Update: 2024-09-13 10:30 GMT

செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசால் கடந்த வருடம்  தொடங்கப்பட்ட விஸ்வ கர்மா திட்டம் தமிழக அரசால் வேண்டுமென்று புறக்கணிக்கப்படுகிறது. 18 வகையான கைவினை கலைஞர்கள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்த பின், மாவட்ட  அளவில் விண்ணப்பதாரரின் விவரம் பரிசோதிக்கப்பட்டு, உத்தரவாதம் இல்லாமல் பணம் கொடுக்கும் திட்டத்தை, பல்வேறு வகையான எளிய மக்களை பலன் அளிக்க கூடிய திட்டத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்து உள்ளது. செப்டம்பர் 17 விஸ்வகர்மா ஜெயந்தி அன்று இந்த திட்டத்தை தொடங்குவதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். குலத்தொழில் என்ற ரீதியில் இந்த திட்டத்தை ஒரு சிலர் எதிர்க்கின்றனர். ஜாதி என்று சொல்லி மக்களை திசை திருப்ப தமிழக அரசு புறக்கணிக்கிறது. பா.ஜ.க ஆளும் மாநில மக்கள் இந்த திட்டத்தின் பயனை அடைந்து வருகின்றனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி தொடர்பாக பேசிய கோவையை சேர்ந்த உணவக சங்கத்தின் கௌரவ தலைவர், அனைவராலும் மதிக்கப்படுகிறார். நல்ல எண்ணத்துடன், என்னுடைய வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் வரும் போது, " எம்.எல்.ஏ., அம்மா ஜிலேபி, சாப்பிடுவார், சண்டை போடுவார் " எனச் சொன்னார். உடனே அந்த இடத்தில் நாங்கள் ரியாக்ட் செய்யவில்லை. என்னால் எத்தனை முறை வந்து உள்ளேன், ஜிலேபி சாப்பிட்டு உள்ளேன் என கேட்டு இருக்க முடியும். ஆனால் பொது இடம் என்பதால் தவிர்த்து விட்டேன். அடுத்த நாள் காலை முதல் எனக்கு போன் செய்து, நான் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார். அது இணையத்தில் தவறாக சென்ற விஷயத்திற்காக நான் வருத்தம், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார். நான் ஆர்.எஸ்.எஸ்., சார்ந்தவன் என்றெல்லாம் சொன்னார். ஜி.எஸ்.டி., தொடர்பாக எது சொல்லி இருந்தாலும் நான் பதில் சொல்வேன், ஆனால் பெண் எம்.எல். ஏ., வாடிக்கையாளர் தொடர்பாக நீங்கள் பேசலாமா, இது முறையா என மத்திய அமைச்சர் கேட்டார். அதற்கு, என்னிடமும் சகோதரி மாதிரி என சொல்லி மன்னிப்பு கேட்டார்.

அரசியல் சவால், போராட்டம் நிறைந்த பாதை, இன்றும் அரசியலில் பெண் அரசியல்வாதியாக சவால் நிறைந்தது. ஆனால், பெண் அரசியல்வாதி என்பதாலேயே கருணை காட்ட சொல்லவில்லை. ஆனால், அதே மேடையில் ஆண் அமைச்சர், ஆண் எம்.எல். ஏ., இதுபோன்று பேச்சு வந்திருக்குமா? ஆளுங்கட்சியில் மாநில அமைச்சர் ஒருத்தர் அனைவரையும் ஒன்றிணைந்து தேர்தல் அல்லாத சமயத்தில் வந்திருக்கிறார்களா? அமைச்சர், எம்.எல். ஏ, போது வெளியில் செல்லும் போது, கனிமொழி, ஜோதிமணி கூட செல்லும் போது சூழந்து கேட்கும் கேள்வி வீடியோ இயல்பாக உள்ளது. சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்திற்கு என்றாலும், பெண் என்று பார்வை இருக்கு. இது சமூகத்தின் மனப்போக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மிரட்டி அவரை வந்து மன்னிப்பு கேட்க வைக்கிறோம் என சொல்லப்படுகிறது. இதில் சாதி வேறு இழுக்கப்படுகிறது.

பெண் அமைச்சர், பெண் எம்.எல். ஏ., பற்றி அநாகரீகமாக பேசி இருக்கலாமா? இத்தனை பேர் மீது பேசிவிட்டு, மன்னிப்பு கேட்பது, எவ்வாறு செய்கிறது? தொழில் அமைப்புகளுடனான கலந்துரையாடல் நிகழ்வுக்கு பின்னும் பல அமைப்புகளுடன் மத்திய நிதி அமைச்சர் பேசிய நிகழ்ச்சி தொடர்பாக இந்த முயற்சி பற்றி யாராவது பேசினார்களா? ஆனால் ஜி.எஸ்.டி., பற்றி பேசியது மட்டும் எப்படி தமிழகத்தில் இந்தளவுக்கு செல்கிறது? ஹோட்டல் நிர்வாகத்தை, உரிமையாளரை வற்புறுத்தி, மிரட்டியோ, கேட்டோ அவர் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News