முதலமைச்சரிடம் பேசியது என்ன? - வானதி சீனிவாசன் விளக்கம்
Coimbatore News- கோவை தெற்கு தொகுதி உட்கட்டமைப்பு தொடர்பாகவும் நேரில் பேச நேரம் ஒதுக்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தேன் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழாவில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். வானதி சீனிவாசனுக்கு விழா மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலின், வானதி சீனிவாசனை பார்த்தவுடன் அவருடன் சிறிது நேரம் மேடையில் பேசினார். இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் கேட்ட பொழுது, தமிழ்பபுதல்வன் நிகழ்வில் பங்கேற்றதற்கு முதல்வர் தனக்கு நன்றி தெரிவித்து கொண்டார் எனவும், இந்த கல்லூரி தன்னுடைய தொகுதியில் வருகின்றது என அவரிடம் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகவும், கோவை தெற்கு தொகுதி உட்கட்டமைப்பு தொடர்பாகவும் நேரில் பேச நேரம் ஒதுக்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவர் கண்டிப்பாக பேசலாம் என்று தெரிவித்தாகவும் கூறினார். மேலும் வரும் 18 ம் தேதி "கலைஞர்" நாணயம் வெளியிட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தனக்கு அழைப்பு விடுத்தார் எனவும், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். நீங்களும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தன்னிடம் சொன்னார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.