அரசு பஸ் பலகையில் விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்த தால் 2பேர் பணியிடை நீக்கம்

கோவையில் அரசுபேருந்து பலகையில் விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2024-09-03 13:00 GMT

நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த பயணி

கோவை ஒண்டிப்புதூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து தினமும் TN 38 N 2658 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து குரும்பபாளையம் வரைக்கும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று இயக்கப்பட்ட போது, பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகையில் விரிசல் ஏற்பட்டு, பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளது. இது குறித்து நடத்துனருடன் பயணி ஒருவர் வாக்குவாதம் செய்த நிலையில், மற்றொரு பயணி அதை வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டார். இந்த காட்சிகளானது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் பலகையில் விரிசலுடன் பேருந்தை வழித்தடத்தில் இயங்க அனுமதித்த கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்து கோட்ட மேலாளர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக பேருந்தை சரி செய்யவும் அறிவுறுத்த பட்டுள்ளது. பேருந்து பழுதடைந்து இருப்பதை முறையாக ஆய்வு செய்யாமல், வழித்தடத்தில் இயக்க அனுமதித்ததால் கிளை மேலாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News