தி கோட் படத்தில் கேப்டன் வந்த காட்சி நன்றாக இருந்தது : விஜய் பிரபாகரன் மகிழ்ச்சி
Coimbatore News- கேப்டன் திரையில் வரும் காட்சிகளை பார்த்த அந்த இரண்டு நிமிடம் எங்களுக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறினார்
Coimbatore News, Coimbatore News Today- தேமுதிக 20 ஆம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் பிரபாகரன் கோவையில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது, கோவை அரசு மருத்துவமனையில் நேற்று 14 ம் தேதி பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தோம். கோவில், சர்ச், மசூதி போன்ற இடங்களுக்கு சென்று வழிபட்டோம். கேப்டன் கூறுவது போன்று எம்மதமும் சம்மதம் என்று தேமுதிகவின் கொள்கையாக உள்ளது. கட்சி தொடங்கிய நாளில் சென்று கடவுகளை வழிபட்டது சந்தோசமான விஷயம். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்திற்கு வந்து உள்ளேன். தே.மு.தி.க அடிப்படை தொண்டர்கள் இந்த கட்சியில் இன்னமும் விசுவாசத்துடன், பணியாற்றி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தே.மு.தி.க கட்சி நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அனைத்து பகுதிகளுக்கு சென்று பணியாற்றுங்கள் இன்னும் எழுச்சி அடையும் எனக் கூறினார் எனத் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி குறித்து ஹோட்டல் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தெளிவாக சரியாக கேட்டு இருந்தார். அதில் மாற்றுக் கருத்து இல்லை நகைச் சுவையான விஷயமாக கேட்டிருந்தார். அதற்கு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட அனைவரும் நகைச் சுவையாக பார்த்ததாகவும், அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள் தான் ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் இதை பெரிதாக்கி கொண்டு உள்ளனர் என்பது தான் எங்கள் தரப்பு கருத்தாக உள்ளது. காங்கிரஸ்சார் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதற்கு உரிய பதில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தான் கூற வேண்டும், வானதி சீனிவாசன் கூறும்போது அவர் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் இருந்தவர் தான் என்றும் கூறுகிறார். இதில் நாம் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, சீனிவாசன் அவர்கள் தான் அவரை மன்னிப்பு கேட்க வைத்தார்களா? அல்லது அவராக சென்று மன்னிப்பு கேட்டாரா என்பது குறித்து அவர் தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.
திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்க வீடியோ ட்விட்டரில் அவர் பதிவு செய்தாரா ? அல்லது அட்மின் பதிவு செய்தாரா ? என்பது தெரியவில்லை, அட்மின் பதிவு செய்ததாக ஒரு வார்த்தையில் ஈசியாக முடித்து விட்டார். அட்மின் பதிவு செய்து இருந்தால் அதற்கு நாம் கருத்துக் கூற முடியாது. மதுவிலக்கு மாநாடு தொடர்பாக திருமாவளவன் எடுத்த முயற்சிக்கு தே.மு.தி.க சார்பில் வரவேற்பதாகவும், இதுவரைக்கும் எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை, அழைப்பு வந்தால் தலைமைக் கழகம் அதற்கான அறிவிப்பை அறிவிக்கும் என்றார்.
கோட் திரைப்படம் நன்றாக இருந்ததாகவும், கேப்டன் நடித்த காட்சிகளை எனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்த்ததாகவும், நீண்ட நாள் கழித்து கேப்டன் திரையில் வரும் காட்சிகளை பார்த்த அந்த இரண்டு நிமிடம் எங்களுக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாக கூறினார். விஜய் அண்ணனுக்கும் சரி, த.வெ.க கட்சிக்கும் சரி முதலில் அவர்களுடைய மாநாடை நடத்தி முடிக்கட்டும். அவர்களுடைய சேவைகள், கொள்கைகள் சொல்லி மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு இருக்கிறது என்று பார்த்து விட்டு தான் கூட்டணி சேர்வதா ? என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அவருடைய கொள்கை அவருடைய தனித்துவம் என்ன என்று நிரூபிக்கட்டும், அதற்குப் பிறகு கூறுவதாகவும், கட்சி தற்பொழுது ஆரம்பித்தது அவர், தே.மு.தி.க வுடன் கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி கேட்க வேண்டும். நடிகர் விஜய் மிகப்பெரிய உச்ச நட்சத்திரம் என்பது மாற்று கருத்து இல்லை, கூட்டணி சந்தர்ப்பம் ஏற்படும் போது அதற்கான விளக்கமும், பதிலும் எங்களிடம் இருந்து வரும் எனக் கூறினார்.