அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்யக்கூடாது: அதிமுக எம்எல்ஏகள் மனு
அடிப்படை வசதி பணிகளுக்காக 31 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம் செலவில் 119 ஒப்பந்த பணிகள் கோரப்பட்டிருந்தது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன் ஆகியோர் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல்வேறு டென்டர்களை திமுக ஆட்சியில் இருந்து செய்யப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். டென்டர்கள் குறித்து முறையான ஆவணங்கள் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில், அது தொடர்பான ஆவணங்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்தனர்.
மாநகாரட்சி பகுதிகளில் அடிப்படை வசதி பணிகளுக்காக 31 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம் செலவில் 119 ஒப்பந்த பணிகள் கோரப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சியில் விடுவித்த 541 டென்டர் பணிகளை தற்போதைய அரசு நீக்கியதாக குற்றச்சாட்டு வைத்தனர். இதன் காரணமாக அத்தியாவசிய பணிகள் முடங்கி கிடப்பதாக தெரிவித்தனர். பருவமழையால் கோவை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிபடுவதாகவும் , உடனடியாக டெண்டர்களை அறிவித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.