ஆபாச கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேடை நடன கலைஞர்கள் மனு
Coimbatore News- கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பொது நிகழ்வுகளில் சிலர் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
Coimbatore News, Coimbatore News Today- கோவில் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பொது நிகழ்வுகளில் சிலர் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கோவை மாவட்ட மேடை நடன கலைஞர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
எம்.ஜி.ஆர், விஜயகாந்த், எம்.ஆர். ராதா உள்ளிட்டோர் வேடம் அணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலிவலகத்திற்கு மேடை கலைஞர்கள் மனு அளிக்க வந்திருந்தனர். தங்கள் துறைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலர், மேடை கலைஞர்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக கலாச்சார சீர்கேடு ஏற்படும் வகையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் எனவும் தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மேடை கலைஞர்கள் மனு அளித்தனர். இதே போல முறைப்படி விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் மேடைக் கலைஞர்களுக்கு உரிய அனுமதிகளையும் வழங்கிட வேண்டும் எனவும் மேடை கலைஞர்கள் வலியுறுத்தினர்.