கோவை: ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆயுள்கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, கோவை தலைமை தபால் நிலையம் எதிரே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சட்டபிரிவு 161ன் சட்டப்படியும் அனைத்து முஸ்ஸீம் மற்றும் ஆயுள் சிறைவாசிகளையும், கருணையோடு உடனாடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்துடன், கோவை தலைமை தபால் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பப்பட்டன.
எஸ்டிபிஐ கட்சியின் கோவை மத்திய மாவட்ட செயலாளர் முகமது இஷக் கூறுகையில், தமிழகம் முழுவதும் சிறையிலே 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்ஸீம்கள் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.