கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை

மேற்கு மண்டல ஐ ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Update: 2021-12-22 12:45 GMT

விசாரணைக்கு வந்த விவேக் ஜெயராமன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 81 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனிடம் இன்று விசாரணை நடத்த காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். இதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் விவேக் ஜெயராமன் விசாரணைக்காக ஆஜரானார்‌. அப்போது மேற்கு மண்டல ஐ ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் குறித்து நன்கு அறிந்தவர் என்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News