சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து

பராமரிப்பு பணிகளுக்காக பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-01 03:03 GMT

சேலம் கோவை மெமு பயணிகள் ரயில்

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் - கோவை இடையிலான பயணிகள் (மெமு) ரயில் சேவை ஏற்கெனவே இரு மாதங்களாக இயக்கப்படாத நிலையில், நாளை (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன்- கோவை சந்திப்பு இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் (மெமு) ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் - கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களும், சேலம் - கோவை பயணிகள்  ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் - கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சேலம் - கோவை பயணிகள் (மெமு) ரயில் (எண்.06803) மற்றும் கோவை - சேலம் பயணிகள் (மெமு) ரயில் (எண்.06802) ஆகியவற்றின் சேவை, நாளை (1-ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News