பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டிய மாநகர காவல் ஆணையாளர்
Coimbatore News- மாநகர் காவல் துறை சார்பில் பொங்கல் வைத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.;
Coimbatore News, Coimbatore News Today- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காவல் துறையினர் சார்பிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினர் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் காவல் அலுவலர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
அதன் பிறகு கோவை மாநகர் காவல் துறை சார்பில் பொங்கல் வைத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டி நடைபெற்றது. பொங்கல் விழாவில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பொங்கல் வைத்து மாட்டு வண்டியை ஓட்டினார். நிகழ்ச்சியை தொடர்ந்து ஓட்டி சைக்கிள் ஓட்டி, ஒயிலாட்டம் மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காவல் துறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்போது மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.