சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மீதான வன்முறைகளை தடுக்க கோரி புகார் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர்.

Update: 2024-07-08 12:15 GMT

பல்வேறு அமைப்பினர் புகார் மனு

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, ஜனநாயக, மனித உரிமை இயக்கத்தினர் ஒருங்கிணைந்து சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் மற்றும் ஆணவ குற்றங்களை தடுத்திட அரசை வேண்டும் நோக்கில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கூட்டியக்கம் என்று பெயரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் செயல்படுகிறார். அவ்வமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்ற கொலை உள்ளிட்ட குற்றங்களில் சாதி, மறுப்பு திருமணம் செய்தல், காதல் புரிதல் முக்கிய ஒன்றாக உள்ளது எனவும், சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், தாக்குதல் மீது உடனடியாக மாநில அரசு ஒரு சிறப்பு தனி பிரிவை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் தொலைபேசியில் அளிக்கப்படும் புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறப்பு பிரிவானது முறையாக செயல்படுகிறதா என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து அதை பாதுகாக்க வேண்டும்.சிறப்பு பிரிவானது தனது வசதிக்கேற்ப ஆலோசனைகளை வழங்குபவர்களை எந்தவித தடை இல்லாமல் நியமனம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர்.

Tags:    

Similar News