கோவை தடாகம் சாலையில் இறந்து கிடந்த மயில்: போலீசார் விசாரணை
கோவை தடாகம் சாலையில் இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
கோவை தடாகம் சாலையில் இறந்து கிடந்த மயில்.
கோவை தடாகம் சாலையில் இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயில் நமது நாட்டின்தேசிய பறவை. மயிலை வேட்டையாடுவதோ, துன்பப்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் மயில் தமிழ் கடவுள் முருக பெருமானின் வாகனமாக கருதப்படுவதால் அது ஆன்மீக ரீதியாகவும் வணங்கப்பட்டு வருகிறது.
வனங்களில் மட்டுமே வசிக்கும் மயில்கள் இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும்போது பொதுமக்கள் வழங்கும் இரைகளை தின்றுவிட்டு தங்கி விடுகின்றன. சில நேரங்களில் அவை விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களை தின்று சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளை விஷம் வைத்து கொன்று விடுகிறார்கள்.
கோவை பகுதிகளில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மயில்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோவில் அடுத்துள்ள ராகவேந்திரா நகரில் இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பார்த்து, புகைப்படம் எடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளி த்தார். தக வலின் பேரில் அங்கு சென்ற வனத் துறையி னர் இறந்த மயிலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
மயில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலின் கழுத்தில் காயம் இருப்பதால் யாராவது கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.