ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

Minister Surprise Inspection கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-02-28 17:00 GMT

விடுதி ஆய்வின் போது  அமைச்சர் உதயநிதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவர்கள்.

Minister Surprise Inspection 

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு, திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, உள்ளிட்டோர் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். பின்னர், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களிடம் விடுதியில் வழங்கப்படும் உணவு, தங்கும் அறைகள், சுகாதாரமான கழிப்பறைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

மாணவர்களுக்கு என்ன வசதிகள் தேவை என்பது குறித்து கேட்டறிந்ததுடன் அவற்றை உடனடியாக செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பியவர் , தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி விடுதி வளாகத்தில் இருந்து வெளியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , விடுதி வாசலில் மாணவர்களுடன் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நாளை காலை கொடிசியா அரங்கில் "நான் முதல்வன்" திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். 

Tags:    

Similar News