வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கு இணையதள கலந்தாய்வு துவக்கம்
கோவை வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு துவங்கப்பட்டு உள்ளது.;
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கு மொத்தம் 2,813 விண்ணப்பங்கள் பெறப் பெற்றன. வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு இன்று முதல் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது. இணைய தள கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல் தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கும் மற்றும் அலைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு உள்ளது.
இணைய தள கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள் http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை வைத்து உள்நுழைந்து 12.07.2024 முதல் 13.07.2024 மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாடங்கள் இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும். இது குறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்விற்கான வழிமுறைகள் http://tnagfi.ucanapply.com என்ற இணையதள வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.