கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்

கோனியம்மன் கோவில் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது, திரண்டிருந்த பக்தர்கள் உப்பினை வீசி வரவேற்றனர்.

Update: 2022-03-02 13:15 GMT

கோனியம்மன் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. 

கோவையில் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் திருத்தோரோட்டம் இன்று நடைபெற்றது. ராஜா வீதியில் உள்ள தேர்முட்டியில் இருந்து இழுக்கப்பட்டு ஒப்பணக்கார வீதி, பிரகாசம் வழியாக மீண்டும் தேர்முட்டியை வந்தடைந்தது.

தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது, திரண்டிருந்த பக்தர்கள் உப்பினை வீசி வரவேற்றனர். மதியம் வரை தேர்முட்டி பகுதியில் தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காலையில் இருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர்முட்டி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் காலை முதலே பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நீர்மோர் உணவுகள் பழங்கள் ஆகியவற்றை வழங்கினர். கோனியம்மன் கோவிலிலும் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே கோவிலிலும் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News