காமாட்சிபுரி ஆதீனம் பீடத்தில் உலக நன்மை வேண்டி மகா யாகம்

நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு அஷ்டமி, நவமி,தசமி,மகா யாகம் காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் நடைபெறுகிறது;

Update: 2023-07-10 02:30 GMT

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கம்போடியா நாட்டிற்கு சென்று அங்கோவார்ட் கோவில் ஆய்வு செய்ததை தொகுப்பு நூல் வெளியிட்டார் 

உலக அமைதி மற்றும் செழுமைக்கான மகா யாகம் கோவையில் தொடங்கியது

கோயம்புத்தூரில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் மகா யாகம் (பெரிய தீப யாகம்)  நேற்று தொடங்கப்பட்டது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக நலன் கருதி நடைபெற்ற மகா யாகத்தை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கம்போடியா நாட்டிற்கு சென்று அங்கோவார்ட் கோவில் ஆய்வு செய்ததை தொகுப்பு நூலாக வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில்ஸ அகில உலக ஆர்எஸ்எஸ்  தலைவர் பரமபூஜ்ய மோகன் பகவத்,  மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ,ஓய்வு பெற்ற  ஐஏஎஸ் அதிகாரி  ராஜேந்திரன், கும்பகோணம்  கார்த்திகேயன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்  மற்றும் ஆதீன அறங்காவலர்கள், உலக சமாதான தெய்வீக பேரவை உறுப்பினர்கள், 51 சக்தி பீட குருகுலம் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

நேற்று  முதல் மூன்று நாட்களுக்கு அஷ்டமி, நவமி,தசமி,மகா யாகம் காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உள்ள யாகசாலையில் நடைபெற உள்ளது.12- 9-2023 நிறைவு யாகமும் பூர்ணாகுவதியும்,மகா கலச அபிஷேகமும் நடைபெற்று வருண மகா யாகம் நடைபெற உள்ளது.

உலக நன்மைக்காக இந்த மகா யாகம் நடத்தப்பட்டு, அனைவருக்கும் அமைதியும், வளமும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்டமி முதல் தசமி வரை மூன்று நாட்கள் தீப யாகம் நடத்தப்படும். இறுதி நாளில் பூர்ணகுவடி, மகா கலச அபிஷேகமும், வருண மகா யாகமும் நடைபெறும்.மகா யாகம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும், மேலும் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மக்கள் ஒன்று கூடி அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்ய இது ஒரு வாய்ப்பு.


Tags:    

Similar News