ரோந்து பணிகளுக்காக சிறிய ரக எலக்ட்ரிக் 'டிரைக் பைக்' வாகனம் அறிமுகம்

காவல் துறையினர் சிறிய தெருக்களில் ரோந்து செல்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த வாகனம் கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2024-08-14 16:15 GMT

ரோந்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ட்ரைக் பைக்

கோவை மாநகர காவல் துறையினர் ரோந்து பணிகளுக்கு சிறிய ரக எலக்ட்ரிக் ‘டிரைக் பைக்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனத்தை தனியார் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். காவல் துறையினர் சிறிய தெருக்களில் ரோந்து செல்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த வாகனம் கண்டறியப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை கொடுக்கும் வகையில் ஒலிபெருக்கி இந்த வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் விரைவில் கூடுதலாக சில எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

ஏற்கனவே கோவை மாநகர காவல் நிலையங்களில் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாகனத்தை இயக்கி தொடக்கி வைத்த பிறகு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்த வாகனம் சிறிய நெருக்கமான இடங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமுகமாக அமைதியாக சுதந்திர தின விழாவை கொண்டாடிட மாநகர் முழுவதும் 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நட்சத்திர விடுதிகள் ஹோட்டல்கள் உள்ளிடவற்றில் தங்கை செல்போனில் நடவடிக்கைகளும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News