சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்
சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரன் போட்டியிடுகிறார். தொடர்ந்து நூதன முறையில் பரப்புரையில் ஈடுபட்டு வந்த மகேஸ்வரன், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மகேஸ்வரன் சங்கனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாக்கடையில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியில் அதிக அளவில் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருவதாகவும், அதனால் சாக்கடையை சுத்தம் செய்ததாக மகேஸ்வரன் தெரிவித்தார். தான் வெற்றி பெற்றால் சாக்கடை பிரச்சனைகளை சரி செய்வதோடு, மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.