கோவையில் திமுக, அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

கோவையில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2024-04-15 14:29 GMT

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். திமுக பிரமுகரான இவர், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவராகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய மீனா லோகு வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 3 கார்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த கார், அலுவலகம்,வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய நிலையில், வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்படவில்லை. 

கோவை துடியலூர் அருகே நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீடு நல்லாம்பாளையம் சபரி கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இவரது வீட்டிற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 3 மணிக்கு துவங்கிய சோதனை இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர் அதிமுக அனுதாபி எனக் கூறப்படும் நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News