என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது! பட்ஜெட் புத்தகத்தில் செந்தில்பாலாஜி படம்

கோவை மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் துறைக்கு சற்றும் தொடர்பு இல்லாத அமைச்சரின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-30 16:05 GMT

கோவை மேயர் கல்பனா 

கோவை மாநகராட்சியின் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்தார்.

கோவை மாநகராட்சியில் மொத்த வருவாய் 2317.97 கோடி உள்ள நிலையில், மொத்த செலவீனம் 2337.28 கோடி ரூபாயாக உள்ளது. 19.31 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இந்த பட்ஜெட்டில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ஒரு மண்டலத்திற்கு ரூ. 10 கோடி வீதம் மொத்தம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதில் அறிவித்தார். மேலும் பட்ஜெட் மீதான விவாதம் இன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறும் என்று மேயர் கல்பனா குறிப்பிட்டிருந்தார்

மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம், முதல்வர் முக ஸ்டாலினின் புகைப்படம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் படத்துடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. துறைக்கு சற்றும் தொடர்பு இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியின் போது, மேயர் கல்பனா தீண்டாமையை கடைபிடிக்கமாட்டோம் என்பதற்கு பதிலாக தீண்டாமையை கடைபிடிப்போம் என்றும் என்று வாசித்துள்ளார். இதற்கும் அதிமுகவில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News