கோவையில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்தவர் கைது

Ganja chocolate seller arrested in Coimbatore;

Update: 2023-05-20 13:03 GMT

கோவை நகரில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லெட்களை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடத்தை சேர்ந்த அபுதாகீர்(வயது45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 6.250 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட், ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள 77.700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் அபுதாஹீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர் .கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 483.301 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 177 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 1925.950 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News