3 மாநகராட்சிகளில் விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் :அமைச்சர் நேரு

சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

Update: 2022-05-08 08:42 GMT

அமைச்சர் நேரு

கோவை மாநகராட்சி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி வாலாங்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அமைச்சர்களுக்கு விளக்கினார்.

இதனை தொடார்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், கோவை மாநகராட்சிக்கு 590 கோடி பாதாள சாக்கடை திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பில்லூர் குடிநீர் திட்டம் 780 கோடி செலவில் ஒரு வருடத்தில் நிறைவு பெறும். 

மாநகராட்சியில் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும். அதைப்போல ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் ஐந்து முக்கியமான சாலைகளை இணைக்கும் விதமாக 145 கோடி திட்டம் துவங்கப்பட உள்ளது.

கோவை மதுரை சென்னை போன்ற இடங்களிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கான பணி தொடர்பாக ஹைதராபாத்தில் சென்று அதிகாரிகள் பார்த்து வந்துள்ளனர். வெள்ளலூர் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்படும் என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News