நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிட மாணவர் பேரவை ஆர்ப்பாட்டம்

Coimbatore News- மாணவர்கள் பலரும் கருப்பு சட்டை அணிந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-07-14 10:45 GMT

Coimbatore News- நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Coimbatore News, Coimbatore News Today- மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று திராவிட மாணவர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கருப்பு சட்டை அணிந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், கார்டூன் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாக பரிசோதனை என்ற பெயரில் அயோக்கியத்தனம் நிகழ்த்தப்படுவதாகவும், ஆனால் வடநாடுகளில் மட்டும் எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் கேள்விகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள் எனத் தெரிவித்தனர்

தமிழ்நாட்டு மக்களின் மாணவர்களின் இளைஞர்களின் முன்னேற்றம் அவர்களுக்கு கண்ணை உருத்துவதாகவும், தமிழகத்தின் ஆட்சியும் அவர்களுக்கு கண்ணை உறுத்துவதாகவும் மத்திய மோடி அரசை விமர்சித்த அவர்கள் திமுகவை ஒழிக்க வேண்டும் என்று செயல்படுவதாக சுட்டிக் காட்டினர். மேலும் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News