உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கலைஞரை போல ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

Update: 2024-09-20 01:58 GMT

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கோவை மாவட்டம் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அவரிடம் வழங்கி ஆசிபெற்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் அவர்களின் இந்த மடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தது.

மேலும் முதல்வர் சந்தித்தபோது, கோவைக்கு செல்கிறேன், பேரூர் ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை அளிக்க உள்ளேன் என தெரிவித்தேன். முதல்வர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்க கூறினார்.

ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாச்சாரம். தமிழோடு இருக்கக்கூடிய பேரூர் ஆதீனம் இருக்க வேண்டும் என தெரிவித்தார். ஒன்றிய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அதேபோல் ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் ஒன்றிய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் ஆக்கப்போகிறார் என்ற செய்திக்கு பதிலளித்த செஞ்சி மஸ்தான், கலைஞர் உரிய நேரத்தில் உள்ளாட்சித்துறையயும், துணை முதல்வர் பதவியையும் ஸ்டாலினுக்கு வழங்கினார். குறிப்பாக உழைப்பு, உழைப்பு, உழைப்பு... என்றால் அது ஸ்டாலின் தான் என்று கலைஞர் கூறினார்.

அதேபோல் அந்த உழைப்பிற்கு எடுத்து காட்டாக ஒட்டுமொத்த தமிழ்சமுதாயத்தின் செல்லப்பிள்ளை. கலைஞரின் பேரப்பிள்ளை. மாமன்னன் உதயநிதிஸ்டாலினும் இன்று தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்று சேர்த்து கழகத்தை வலுப்படுத்துவதாக தெரிவித்த அவர், அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கலைஞரை போல ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

Tags:    

Similar News