கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, உதயகுமாரிடம் சிபிசிஐடி விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டதீபு, உதயகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-07-25 08:15 GMT

விசாரணைக்கு ஆஜராக வந்த உதயகுமார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருபவர்களிடம் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த திங்கள்கிழமை சம்மன் வழங்கினர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தீபு மற்றும் உதயகுமார் ஆகியோரை இன்றும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரை வரும் 30ஆம் தேதியும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு மூன்றாவது குற்றவாளியாகவும், ஜம்ஷீர் அலி நான்காவது குற்றவாளியாகவும், உதயகுமார் ஏழாவது குற்றவாளியாகவும் ஜித்தின் ஜாய் பத்தாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் பதிவான தகவல் பரிமாற்றங்களை சேகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபு மற்றும் உதயகுமார் ஆகியோர் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News