அன்னபூர்னா ஓட்டல் விவகாரம் பற்றி கோவை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்

மத்திய நிதி அமைச்சரின் செயல்பாட்டை கண்டிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் கோவை மாநகராட்சி கூட்டத்தில் பேசினார்.

Update: 2024-09-13 11:30 GMT

கோவை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் நவீன்குமார்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவகங்களில் உள்ள ஜிஎஸ்டி குளறுபடியை சரி செய்து கொடுங்கள் என்று கோரிக்கை வைத்ததற்காக தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார்.

இது வைரலான நிலையில் அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அன்னபூர்னா ஹோட்டல் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சரின் செயல்பாட்டை கண்டிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் பேசினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்தாவது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் பேசும் போது, கோவையின் அடையாளமான அன்னபூர்ணா நிறுவனத்தை கேவலப்படுத்துவது, நம் அத்தனை பேரையும் கேவலப்படுத்துவது போன்றது என்றார். அன்னபூர்ணா உரிமையாளரை கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்து, கூனி குறுக வைத்திருக்கின்றனர் எனவும், இந்த பாசிச, அராஜக போக்கையும், மத்திய நிதி அமைச்சரின் செயல்பாட்டையும் வன்மையாக கண்டிப்பதாகவும் கவுன்சிலர் நவீன்குமார் பேசினார்.மத்திய நிதி அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் பேசியதற்கு சக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags:    

Similar News