கராத்தே போட்டியில் 25 பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் அசத்தல்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மூன்று தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கல பதக்கம் என 25 பதக்கங்களை வென்று அசத்தினர்.;

Update: 2024-01-31 11:00 GMT

பதக்கங்களை வென்ற மாணவர்கள்

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

அண்மையில் நிகான் சோட்டாகான் கராத்தே அசோசியேசன் சார்பில் 13 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கோவா, குஜராத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர். கட்டா, குமித்தே என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கராத்தே போட்டியில், சப் ஜூனியர், ஜூனியர், கேடட், சீனியர் அடிப்படையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அணி சார்பாக நிகான் சோட்டாகான் கராத்தே அசோசியேஷனின் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் அவர்கள் மூன்று தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கல பதக்கம் என 25 பதக்கங்களை வென்று அசத்தினர்.

வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் மை கராத்த இன்டர்நேஷனல் நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News