தவெகவிற்கு அரசியல் கட்சிக்கான அனுமதி - இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்

Coimbatore News- விஜயின் தவெக கட்சியினர் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Update: 2024-09-08 10:30 GMT

Coimbatore News- இனிப்புகள் வழங்கிய தவெக கட்சியினர். 

Coimbatore News, Coimbatore News Today- நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து தனது கட்சிக்கான கொடியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த அவர், தனது கட்சிக்கான தேர்தல் ஆணைய அனுமதிக்காக காத்தி்ருந்தார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக அதன் தலைவர் விக்னேஷ் மற்றும் இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் கோவை குறிச்சி பொங்காளியம்மன் கோவில் முன்பாக திரண்ட தொண்டர்கள் தமிழகத்தி்ல் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என உற்சாகமாக கோஷமிட்டனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணைய அனுமதி - 23 ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள முதல் மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி என அடுத்த அடுத்த அறிவிப்புகள் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை தருவதோடு, தமிழக அரசியலில் நடிகர் விஜயின் இந்த அடுத்த கட்ட நகர்வுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News