அன்னபூர்ணா உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் : பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

Coimbatore News- அன்னபூர்னா ஹோட்டல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-14 12:30 GMT

Coimbatore News- பாஜக நிர்வாகி சதீஷ்

Coimbatore News, Coimbatore News Today- கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்த வேண்டுமென அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் பேசியது வைரலாகியது. பின்னர் அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்னபூர்னா ஹோட்டல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பா.ஜ.கட்சியினர் சதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் அனுமதி பெற்று சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் மீது பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் இது குறித்து உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் வீடியோ வெளியான விவகாரம் குறித்து கட்சியில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News