பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு

Coimbatore News- தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மனு ஏற்கப்பட்டது.

Update: 2024-03-28 09:00 GMT

Coimbatore News- அண்ணாமலை வேட்பு மனுத்தாக்கல் செய்த போது எடுத்த படம் (கோப்பு படம்)

Coimbatore News, Coimbatore News Today- கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றது. அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அதிமுக, திமுக, பாஜக கட்சிகளின் முகவர்களும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தது. ஒரு வேட்பு மனுவை தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு வேட்பு மனுவில் அபிடவிட் என்று சொல்லக்கூடிய பிரமாண பத்திரத்தில் தேர்தல் ஆணையம் கேட்கப்பட்ட முறையில் அண்ணாமலையின் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல பார்ம் 26 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசை படுத்தவில்லை. மேலும் வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை என அதிமுக, நாம்தமிழர் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு வைத்தனர்.

அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்ந்த முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கிராந்தி குமார் பாடி முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை பிழைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கப்பட்டதாக அறிவித்தார். இதனை அடுத்து போலீசார் மற்ற கட்சியின் வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தினர். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

Tags:    

Similar News