கோவையில் இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தற்கொலை

கோவையில் இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-07 10:50 GMT

கோவையில் இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி திவ்யபாரதி (வயது 31). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் திவ்யபாரதி தனது முதல் கணவரை பிரிந்து ரகுபதி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக ரகுபதியுடன் வசித்து வந்தார். ரகுபதிக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ரகுபதி தனது முதல் மனைவியுடன் மீண்டும் பேசி வந்தார். இது திவ்யபாரதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கேட்ட போது கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று ரகுபதி வேலை சம்பந்தமாக மங்களூருக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த திவ்யபாரதி தனது கணவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனது கணவரிடம் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்போ வதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரகுபதி இது குறித்து தனது வீட்டில் வேலை செய்யும் பிரியா என்பவரை தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது திவ்யபாரதி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் ரத்தினபுரி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட திவ்யபாரதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News